Sunday, December 5, 2010

2. நாக்கு


மாந்தர்களில் நாக்கு அல்லது நாவானது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும் தரும் உறுப்பு. மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குத்தள்ளுவதும் நாக்கே. உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்காகும். நாக்கின் மேற்புறத்தில் சுவையுணர் நுண்புடைப்புகள் பல உள்ளன. நாக்கு பலவாறு வளையவல்லது, எனவே வெவ்வேறு வகையான ஒலிகள் எழுப்பி மொழி பேசுவதற்கும் நாக்கு மிகவும் துணை செய்கின்றது. தமிழில் வழங்கும் ழகரம், ளகரம், லகரம், நகரம் முதலிய எல்லா எழுத்தொலிகளையும் பலுக்கிப் பார்த்தால் மொழி பேசும் பொழுது நாவின் பணி தெளிவாக விளங்கும். வாயில் ஊறும் உமிழ்ந்நீரினால் நாக்கு எப்பொழுதும் ஈரமாக இருக்கும்.









உடலில் உள்ள தசைகளில் நாக்கு வலிமையான தசைகளில் ஒன்று. உடம்பிலேயே தொடு உணர்ச்சி மிக்க உறுப்பு நாக்கின் நுனி ஆகும். நாக்கின் மேற்புறத்தில் உள்ள நுண்புடைப்புகளில் நான்கு வகையான நுண்புடைப்புகள் உள்ளன. சுவையுணர் நுண்புடைப்புகளுக்கு நாமுடிப்பு என்று பெயர். நாமுடிப்புகளின் அமைப்பைப் பொருத்து அவை இனிப்பு, புளிப்பு, கசப்பு, கரிப்பு,உமாமி ஆகிய ஐந்து வகையான சுவைகளை தனித்தனியாகவும் கூட்டாகவும் உணர்வதாக அறிவியாளர்கள் அறிந்துள்ளனர். அண்மைக்காலம் வரையிலும் நாவின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு சுவைகளை உணர்வதாகத் தவறாக பாடநூல்களில் இருந்து பொதுஅறிவுக் கட்டுரைகள் வரை எங்கும் எழுதப்பட்டு வந்தது. தனித்தனி சுவைகளை உணர நாவினில் தனியான இடங்கள் ஏதும் இல்லை. சுவையை உணர மூக்கால் நுகர்வதும் இன்றியமையாதது.

நாவின் நுண்புடைப்புகளாகிய நாமுடிப்புகளின் நான்கு வகைகளில் ஒருவகையான நாமுடிப்பு மெல்லிய இழைபோல் உள்ளது ( iliform) , இன்னொருவகையான நாமுடிப்பு, நாய்க்குடை அல்லது காளான் போல் தலைப்பகுதி பருத்து உள்ளது (fungiform). மூன்றாவது வகை நாமுடிப்பு ஒரு வளையம் போன்ற வடிவில் உள்ளது. இதுவே நாமுடிப்புகளில் பெரியது (circumvallate). நான்காவது வகை தட்டையாக உள்ளது (foliate).


3. நாக்கு

தினமும் நாம் சாப்பிடுகிறோம். வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாப்பிடாமல் நாம் உயிர்வாழ முடியாது என்பது நமக்கு மறப்பதில்லை. ஆனால் சாப்பிடும்போது செய்ய வேண்டிய சில விஷயங்களைத்தான் நாம் மறந்து விடுகிறாம்.

சிலர் மிக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் மிக மெதுவாக சாப்பிடுவார்கள். எப்படி சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாக கடிக்கப்பட்டு மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம். அப்படி அப்படியே விழுங்கக் கூடாது.

துபாயிலிருக்கும் ஒரு நண்பர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிடுவார். கள்ளக்குறிச்சியில் இருக்கும் இன்னொரு நண்பர் ஒவ்வொரு வேளையும் சுமார் முக்கால் மணி நேரம் சாப்பிடுவார். அது வும் தவறு, இதுவும் தவறு.

சைவ உணவை சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விடலாம். அசைவ உணவு சாப்பிடும்போது கொஞ்சம் லேட்டாகத்தான் செய்யும். குறைந்தது சுமார் 5 நிமிடங்களும், கூடுத லாக சுமார் பதினைந்து நிமிடங்களும் சாப்பிடுவதற்காக ஒதுக்குவது நல்லது. ஐந்து நிமிடங்களுக்கு குறைவாக சாப்பிடு வதும் நல்லதல்ல. பதினைந்து நிமிடங்க ளுக்கு அதிகமாக சாப்பிட்டுக் கொண்டிருப் பதும் நல்லதல்ல.

எந்த உணவை நாம் சாப்பிட்டாலும் கடித்து சுவைத்து அதன்பின்தான் விழுங்க வேண் டும். கோழி விழுங்குவதைப்போல வாயில் போடும் உணவை அப்படியே விழுங்கக்கூடாது. நிறையபேர் இப்படித்தான் சாப்பிடு கிறார்கள்.

ஒரு முழு நெல்லை கோழி அப்படியே விழுங்குகிறது. கோழிக்கு பற்கள் கிடையாது. அதனால் மெல்லுவது கிடையாது. அதற்கு அலகு அதாவது மூக்கும், நாக்கும்தான் உள்ளது. கோழி உண்ணும் உணவு அதனுடைய அலகாலும், வயிற்றினாலும்தான் சிறுசிறு துண்டுகளாகவும் கூழாகவும் ஆக்கப்படுகிறது. அந்த பச்சை நெல்லை ஜீரணிக்க வைக்கக்கூடிய அளவுக்கு மிக சக்தியான என்சைம் மற்றும் உணவு மண்டல அமைப்பு கோழிக்கு இருக்கிறது. நமக்கு அப்படி இல்லை.

நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கின்றன. அவையாவன. 1.பரோட்டிட் சுரப்பி, 2.சப்மேன்டிபுலார் சுரப்பி, 3.சப்லிங்குவல் சுரப்பி. இந்த மூன்று சுரப்பிகளிலிருந்தும் வரும் குழாய்கள் வாயினுள் வந்துதான் திறக்கின்றன.

பரோட்டிட் சுரப்பிதான் இந்த மூன்றில் மிகப்பெரியது. அடுத்ததாக உள்ள சப்மேன்டிபுலார் சுரப்பிதான் 70 சதவீத உமிழ்நீரை சுரக்கிறது. ஐந்து சதவீத உமிழ்நீர், மூன்றாவதாக உள்ள சப்லிங்குவல் சுரப்பியிலிருந்து சுரக்கின்றது.

உணவை பார்த்தவுடன், உணவை நினைத்தவுடன், உணவின் வாசனையை கர்ந்தவுடன் உமிழ்நீர் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. உமிழ்நீரில் மிகஸ், புரோட்டின், தாது உப்புக் கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்சைம் ஆகியவை இருக்கின்றது. ஒரு நாளைக்கு சுமார் 1 முதல் 2 லிட்டர் உமிழ்நீர் வாயிலிருந்து வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது.

எல்லா நேரமும் நம்மை அறியாமலேயே நாம் வாயில் சுரக்கும் உமிழ்நீரை உள்ளே விழுங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். உமிழ்நீரிலுள்ள என்சைம் நாம் சாப்பிடும் உணவில் ரசாயன மாற்றங்களை வேகமாக ஏற்படுத்த உதவி செய்கிறது. இந்த என்சைம் இல்லாவிட்டால் நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக வாரக்கணக்கில் ஏன் மாசக் கணக்கில்கூட ஆகும். அப்படியானால் நம் உடலிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள் இவையெல்லாம் ஒழுங்காக வேலை செய்யாது. இவையெல்லாம் வேலை செய்யாவிட்டால் நம்மால் உயிர்வாழ முடியாது.

உமிழ்நீரிலுள்ள அமைலேஸ் என்கிற நொதி (என்சைம்) நாம் சாப்பிடும் உணவிலுள்ள ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட்டை மால்டோஸ் என்கிற சர்க்கரைப் பொருளாக மாற்று வதற்கு உதவி செய்கிறது. உணவு சிறுகுடலில் போய்ச் சேரும்போது இன்னும் அதிகமாக அமைலேஸ் என்சைம் கணையத்திலிருந்து சுரக்கப்பட்டு உணவில் மிச்சம் மீதியிருக்கும் ஸ்டார்ச்சையும், மால்டோசாக மாற்றிவிடுகிறது. மால்டேஸ் என்கிற இன்னொரு என்சைம் எல்லா மால்டோசையும் குளுக்கோசாக மாற்றிவிடுகிறது. இந்த குளுகோஸ்தான் கடைசி யாக ரத்தத்தில் கலக்கிறது. என்னவென்று புரியவில்லையா? ஒன்றுமில்லை நாம் சாப்பிடும் உணவிலுள்ள சர்க்கரையை வாயிலுள்ள என்சைம் குளுகோசாக மாற்றி ரத்தத்தில் கலக்கச்செய்கிறது, அவ்வளவுதான்.

நமது உமிழ்நீரிலுள்ள மிசின் என்கிற பொருள் வாய் எப்பொழுதும் ஈரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. அதேமாதிரி உமிழ் நீரிலுள்ள லைசோசைம் என்கிற பொருள் நாம் சாப்பிடும் உணவிலுள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்துவிடுகிறது.

வயிற்றுக்குள் போய் எல்லா உணவும் ஜீரணம் ஆகிவிடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறு. உணவு வாயில் போடப்பட்டவுடன் உதடு, கன்னம், நாக்கு ஆகியவற்றிலுள்ள தசைகள் ஒன்று சேர்ந்து வாயினுள் போடப்பட்ட உணவை வாயினுள்ளேயே சிறிது நேரம் வைத்துக் கொண்டிருக்கும்படி செய்கிறது. அதே நேரத்தில் வாயிலுள்ள 3 உமிழ்நீர் சுரப்பிகள் சுரக்கும் திரவம் வாயில் போடப்பட்ட உணவுக் கவளத்தைச் சூழ்ந்து செரிமானத்திற்கு தயாராகிறது. பற்களுக்கிடையில் மாட்டிய உணவு துண்டு துண்டாக வெட்டப்பட்டு பின்பக்கத்திலுள்ள பற்களால் மிகச்சிறிய துண்டுகளாக ஆக்கப்பட்டு விழுங்குவதற்கு ஏதுவாக தயாராகிறது.

நாக்கிலுள்ள சுவை நரம்புகள் நாக்கில் வந்து தொடும் உணவானது இனிப்பா, புளிப்பா, உப்பா, துவர்ப்பா என்பதைக் கண்டுபிடித்து அதற்குத் தேவையான சரியான என்சைம் களை சுரக்கச் செய்கிறது. நாக்கு இப்படியும் அப்படியும் புரளும்போது நாக்குக்கு இடை யில் உணவுத்துண்டுகள் பாதி நிலையில் ஜீரணமாகி ஒரு உருண்டையாக ஆக்கப்பட்டு நாக்கு மூலமாகவே அந்த உணவு உருண்டை தொண்டைக்குள் தள்ளப்படுகிறது. தொண்டையிலிருந்து வயிற்றுக்குள் இறங்கிய உணவு அங்குள்ள 5 என்சைம்களுடன் சேர்ந்து மேற்கொண்டு ஜீரணமாகும் வேலையை ஆரம்பிக்கிறது.

வெற்றிலை, பாக்கு, புகையிலை, பான், ஜர்தா போன்றவற்றைத் தொடர்ந்து போடும் பழக்க முள்ளவர்களுக்கு வாயினுள் வந்து முடியும் உமிழ்நீர் சுரப்பிகளின் குழாய் பாதிக்கப்பட்டு அடைபடும் வாய்ப்பு அதிகம். எனவேதான் இத்தகைய பழக்கம் உள்ளவர்களுக்கு சரிவர உமிழ்நீர் சுரக்காமல் அடிக்கடி தொண்டை காய்ந்து போய்விடுகிறது.

இதேபோல் பற்களை இழந்த ஒருவருக்கு சரியான சத்தான உணவு கிடைக்காது. காரணம் அவரால் நன்றாக மெல்ல முடியாததால் அவர் சாப்பிடும் உணவு சரியான முறையில் ஜீரணம் ஆகாமல் உணவிலுள்ள சத்தான பொருட்கள் உடலுக்குப் போய்ச் சேருவதில்லை. எனவே இவர்களுக்கு தேக ஆரோக்கியமும் குறைந்துவிடும்.

ஆகவே சாப்பிடுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள். உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்கு மட்டும்தான் வாய் உபயோகப்படுகிறது என்று தவறாக நினைத்து விடாதீர்கள். சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகும் வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

தகவல் – டாக்டர் எஸ்.அமுதகுமார் எம்.பி.பி.எஸ்

3. போதுமென்ற மனம்


நம்மிடத்தில் செல்வங்கள் இருக்கும் போது அதை வைத்து நமது வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்துக் கொள்ளலாம். ஆனால் பிறரைப் பார்த்து அவனை விட நாம் செல்வந்தராக இருக்க வேண்டும் என்பதற்காக பிறரிடம் யாசகம் கேட்கிறோம். இப்படி யாசகம் கேட்பதன் தீமைகளைக் கடந்த இதழில் கண்டோம். எனவே யாரிடமும் கையேந்தாமல் இருக்கின்ற செல்வத்தை வைத்து நமது உள்ளம் திருப்தி கொள்ள வேண்டும். நம்மிடம் போதுமென்ற மனம் இருக்க வேண்டும்.

"யாரிடமும் எதையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் யார் பொறுப்பு ஏற்கிறார்களோ அவருக்கு சுவனத்தை நான் பொறுப்பு ஏற்கிறேன்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஸவ்பான் (ரலி) அவர்கள், "நான் (அவ்வாறு இருப்பேன்)' என்று கூறினார்கள். அவர் யாரிடமும் எதையும் கேட்காதவராக ஆகிவிட்டார்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

நூல்: அபூதாவூத் 1400

நாம் பிறரிடத்தில் யாசகம் கேட்காமல் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும்.

ஏழைக்கு தர்மம் செய்ய வேண்டும்

பிறருக்குத் தருவதாகயிருந்தால் ஏழைக்குக் தர வேண்டும். நமது அந்தஸ்திலுள்ள பணக்காரனுக்குக் தரக் கூடாது.

வாழ்க்கையில் போதிய செல்வம் இல்லாமலிருந்தாலும் யாரிடமும் கேட்காமல் இருப்பதை வைத்து போதுமாக்கிக் கொள்பவரே ஏழையாவார். அப்படிக் கேட்டாலும் பிறரிடத்தில் கெஞ்சிக் குழைந்து கேட்காமல் தனது சுய மரியாதையைப் பேணுபவன் தான் ஏழை. இப்படிப்பட்டவர்களுக்குத் தான் நமது செல்வங்களை தர்மம் செய்ய வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக அலைபவன் ஏழையல்லன். மாறாக, தன் வாழ்க்கைக்குப் போதிய செல்வம் இல்லாமலிருந்தும் பிறரிடம் கேட்க வெட்கப்படுகின்றவனும் அல்லது (அப்படிக் கேட்டாலும்) கெஞ்சிக் குழைந்து கேட்காதவனுமே ஏழையாவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1476

கேட்கக் கூடாது; தந்தால் வாங்கலாம்

நாம் ஏழையாக இருந்தாலும் பிறரிடத்தில் கேட்கக் கூடாது. நமது சுயமரியாதையை நாம் பேண வேண்டும். அவர்களே நமது கஷ்டங்களைப் பார்த்து நமக்குத் தந்தால் அதை வாங்கலாம். அதை மறுக்கக் கூடாது.

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னைவிட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)'' என்றார்கள்.

நூல்: புகாரி 1473

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (வலிந்து) கேட்காமலும் உள்ளம் ஆசைப்படாமலும் தனது சகோதரனிடமிருந்து ஏதாவது பொருள் ஒருவருக்கு வந்தால் அதை அவர் ஏற்கட்டும். அதை மறுக்க வேண்டாம். அது அல்லாஹ்விடமிருந்து வந்த உணவாகும்.

அறிவிப்பவர்: காலித் பின் அதீ அல்ஜுஹ்னி (ரலி)

நூல்: அஹ்மத் 17257

பிறருக்காகப் பரிந்துரைத்தல்

நமக்குப் போதுமான செல்வம் இருக்கும் போது நமக்கு யாராவது அன்பளிப்பு வழங்கினால், அது நமக்குத் தேவையில்லையென்றால் அதைப் பிறருக்குத் தருமாறு பரிந்துரைக்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரிடமும் கேட்காமலும் உள்ளம் ஆசை வைக்காமலும் இந்த உணவிலிருந்து ஏதாவது ஒன்று ஒருவருக்கு வந்தால் அவர் அதைத் தனது உணவில் சேர்த்து விசாலமாக்கிக் கொள்ளட்டும். அவர் தேவையில்லாதவராக இருந்தால் அவரை விடத் தேவை உடைய ஒருவருக்குக் கொடுக்கட்டும்

அறிவிப்பவர்: ஆயித் பின் அம்ரு (ரலி)

நூல்: அஹ்மத் 19726

போதுமென்ற மனமுள்ளவன் பணக்காரன்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1898

போதுமென்ற மனமுள்ளவன் வெற்றியாளன்

அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வத்திலிருந்து போதுமாக்கிக் கொள்ள வேண்டும். யாரிடத்தில் போதுமென்ற மனம் இருக்கிறதோ அவர் தான் வெற்றியாளர் ஆவார்.

அவன் மாடி வீடு கட்டுகிறான்; நாமும் மாடி வீடு கட்ட வேண்டும். அவன் பைக் வாங்குகிறான்; நாமும் பைக் வாங்க வேண்டும். அவள் நகை வாங்குகிறாள்; நாமும் நகை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

வீடு கட்டுவதற்கும், பைக் வாங்குவதற்கும், நகை வாங்குவதற்கும் நாம் கடன் வாங்குகிறோம். ஆனால் அல்லாஹ் நமக்கு வழங்கியது போதும் என்ற மனம் நம்மிடத்தில் இருந்தால் யாரிடத்திலும் கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்தலாம்.

நாம் கடன் வாங்கி விட்டு அதை திருப்பித் தருவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறோம். நாம் மரணித்து விட்டால் நம்முடைய குடும்பத்தாரிடம் அந்தக் கடனைக் கேட்கிறார்கள். அதைச் செலுத்துவதற்கு அவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அதனால் அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வத்தைப் போதுமென்ற மனதுடன் நாம் பொருத்திக் கொண்டால் நாம் தான் வெற்றியாளர்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1903

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நாம் ஏழையாக இருக்கும் போது நமக்குக் கீழ் உள்ளவரைப் பார்க்க வேண்டும். நாம் ஏழை என்றால் நமக்குக் கீழ் உள்ள பரம ஏழையைப் பார்க்க வேண்டும். நாம் நடுத்தர பணக்காரனாக இருந்தால் நமக்குக் கீழ் உள்ள ஏழையை பார்க்க வேண்டும். நாம் பெரும் பணக்காரனாக இருந்தால் நமக்குக் கீழ் உள்ள நடுத்தர பணக்காரனைப் பார்க்க வேண்டும். இப்படி இருந்தால் நமக்குப் போதுமென்ற மனம் வந்துவிடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5671

ஒரு மனிதர் நம்மை விட செல்வந்தராகவும், அழகானவராகவும் இருந்தால், அவரைப் பார்த்து நமது மனதை அலைய விடாமல், செல்வத்திலும் அழகிலும் நம்மை விடக் குறைந்தவரைப் பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்தால் நமது மனதைக் கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளலாம். நமது உள்ளத்தில் போராசையும் வராது. இந்த வழிமுறைகளை நாம் அனைவருமே கடைபிடிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்கüல் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)

நூல்: புகாரி 6490

உலகத்தில் அன்னியனைப் போல் வாழ வேண்டும்

இவ்வுலகில் நாம் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும்; நம்மிடத்தில் தோட்டம், துறவு, வீடு, பங்களா, கார் இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். இப்படி ஆசைப்படும் போது இவ்வுலகில் தடுக்கப்பட்ட அனைத்து செயல்களையும் செய்வதற்குத் தயங்க மாட்டோம். இவ்வுலகில் தவறு செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் இருக்கிற செல்வத்தை வைத்துப் போதுமாக்கிக் கொள்ள வேண்டும். அல்லது இவ்வுலகில் வழிப்போக்கனைப் போன்று வாழ வேண்டும். இப்படி இருந்தால் வெற்றி பெற்று விடலாம்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு "உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்கüல் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "நீ மாலை நேரத்தை அடைந்துவிட்டால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்துவிட்டால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உனது இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உனது வாழ்நாüல் சிறி(து நேரத்)தைச் செலவிடு'' என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

நூல்: புகாரி 6416

செல்வத்திற்கு அடிமையானவன் துர்பாக்கியசாலி

இந்த உலக ஆசாபாசங்களுக்காகவும் தனது குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் நாம் இந்த உலகத்தில் செல்வங்களைச் சேமிப்பதற்கு ஆசைப்படுகிறோம். ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் செல்வத்தின் மீது உள்ள மோகத்தால் நாம் நஷ்டவாளியாக ஆகிவிடுகிறோம். அல்லாஹ் நமக்குத் தாராளமாக செல்வத்தை வழங்கும் போது மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வை போற்றிப் புகழ்கிறோம்; வணக்க வழிபாடுகளையும் சரியான முறையில் செய்கிறோம்.

ஆனால் அல்லாஹ் செல்வத்தைக் குறைவாகத் தந்து நம்மை சோதிக்கும் போது அல்லாஹ்வை நாம் திட்டுகிறோம். அல்லது வணக்க வழிபாடுகளில் குறை வைக்கிறோம். வணக்க வழிபாடுகளில் குறை வைக்கும் போது நாம் நஷ்டவாளியாக மாறி விடுகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொற்காசு, வெள்üக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பü ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6435

செல்வத்திற்கு அடிமையானால் மார்க்கம் போய்விடும்

செல்வத்தின் மீதுள்ள மோகத்தால் மார்க்கத்திற்குக் கட்டுப்படாமல், மார்க்கம் அனுமதிக்காத செயல்களில் ஈடுபடுகிறோம். ஒருவர் செல்வம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி பதவியின் மீது ஆசை கொள்கிறான்.

தற்காலத்திலுள்ள அரசியல்வாதிகளை எடுத்துக் கொண்டால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக யாரும் அரசியலுக்கு வருவதில்லை. நாம் முன்னேற வேண்டும்; பணக்காரனாகவும் மதிப்புமிக்கவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருகிறார்கள்.

இவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் இஸ்லாம் கூறிய அனைத்துக் கடமைகளையும் தன்னால் முடிந்த அளவு கடைபிடிப்பார்கள். ஆனால் இந்தச் சாக்கடையில் விழுந்த பிறகு இஸ்லாம் கூறிய அனைத்துக் கடமைகளையும் மறந்து விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் மார்க்கமும் இவர்களிடத்திலிருந்து அழிந்து விடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு ஆட்டு மந்தையினுள் அனுப்பி வைக்கப்பட்ட பசியோடு உள்ள இரண்டு ஓநாய்கள் அதனை நாசமாக்குவதானது, ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதுள்ள பேராசை அவனுடைய மார்க்கப் பற்றை நாசாமாக்குவதை விட மோசமானது கிடையாது.

அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி)

நூல்: திர்மிதி 2298

7. யுக முடிவு நாளின் அடையாளங்கள்.


மகளின் தயவில் தாய் :

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50

*பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்*

'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள். நூல்: புகாரி 50

*குடிசைகள் கோபுரமாகும்*

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 7121

*விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்*

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

*தகுதியற்றவர்களிடம் பொறுப்பு*

'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று விடையளித்தார்கள். நூல் : புகாரி 59, 6496

*பாலை வனம் சோலை வனமாகும்*

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது நூல் : முஸ்லிம் 1681

*காலம் சுருங்குதல்*

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.

(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம். நூல் : திர்மிதீ 2254)

*கொலைகள் பெருகுதல்*

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

*நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்*

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல்: புகாரி 1036, 7121

*பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது*

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016, 12079, 12925, 13509.

*நெருக்கமான கடை வீதிகள்*

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: அஹ்மத் 10306.

*பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்*

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

*ஆடை அணிந்தும் நிர்வாணம்*

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும். நூல் : முஸ்லிம் 3971, 5098

*உயிரற்ற பொருட்கள் பேசுவது*

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 11365

*பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்*

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 1511

*தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்*

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493

*பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்*

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493

*சாவதற்கு ஆசைப்படுதல்*

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.நூல்: புகாரி 7115, 7121

*இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்*

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: புகாரி 3609, 7121

*முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்*

'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள். நூல்: புகாரி 3456, 7319

*யூதர்களுடன் மாபெரும் யுத்தம்*

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.நூல்: புகாரி 2926

*கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்*

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.நூல் : புகாரி 5179

*யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்*

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. நூல் : புகாரி 7119

*கஹ்தான் இன மன்னரின் ஆட்சி*

(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி. நூல் : புகாரி 3517, 7117

*அல்ஜஹ்ஜாஹ் மன்னர்*

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி. நூல் : முஸ்லிம் 5183

*எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்*

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி. நூல் : முஸ்லிம் 5191

*செல்வம் பெருகும்*

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி. நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி. நூல் : புகாரி 1424

*மாபெரும் யுத்தம்*

இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936

*பைத்துல் முகத்தஸ் வெற்றி*

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. கொத்து கொத்தாக மரணம்

4.நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6.மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள். நூல் : புகாரி 3176

*மதீனா தூய்மையடைதல்*

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி.நூல் : முஸ்லிம் 2451

*அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை*

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.நூல் : முஸ்லிம் 3546

*மாபெரும் பத்து அடையாளங்கள்*

இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 - (அதிசயப்) பிராணி

4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 - இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.

*புகை மூட்டம்*

வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக
அமைந்திருக்கும். (அல்குர்ஆன் 44:10,11)

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி) நூல்: தப்ரானி

*யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை*

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள். (அல்குர்ஆன் 21:96)

*ஈஸா(அலை) அவர்களின் வருகை*

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும். (அல்குர்ஆன் 43:61)

*மூன்று பூகம்பங்கள்*

(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்.

*பெரு நெருப்பு*

எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்

Friday, December 3, 2010

3. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை





அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை
ஒவ்வொரு பெண்ணும் (கருவறை யில்) சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொரு ளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவு உள்ளது. (அல் குர்ஆன் 13:8)

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படு வதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங் களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணால்,பின்னர் விந்தால், பின்னர் கரு வுற்ற சினை முட்டையால், பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாதது மான தசைக்கட்டியால் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப் படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடை கின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படு வோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. (அல் குர்ஆன் 22:5)


பொதுவாக மனித உடலுக்கு என சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது அவற்றுள் ஒன்றாகும். இதற்கு உதாரணமாக கண்களைக் குறிப்பிடலாம். கண்களில் ஏதேனும் தூசுகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே முயற்சிக்கும்.

இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உயிரைத் தனக்குள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் வளர்த்து திடீரென அதை வெளியேற்றுவதற்காக முயற்சிக்கிறது. இவ்வாறு முயற்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகின்றது. இதன் காரண மாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத் தான் இவ்வசனம் கூறுகிறது.

ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட கால நிர்ணயப்படியே அவனிடத்தில் உள்ளன' என்ற சொற்றொடர் முக்கிய மாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இயற்கைக்கு மாறாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கரு வறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் ஏன் வெளியேற்றுகிறது என்பதற்கு இன்று வரை காரணம் கண்டுபிடிக்கப் படவில்லை.
அன்னியப் பொருளைக் கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கும் இது வரை விடையில்லை.

இயற்கைக்கு மாறாக இறைவன் தனது வல்லமையைப் பயன்படுத்தி ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயத்தின் படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது என இந்தச் சொற்றொடர் விளக்குகிறது.





.