Sunday, December 5, 2010

4. விரல் ரேகை பற்றி குர்ஆன்


அவ்வாறில்லை! அவனது விரல் நுனி களையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்
(அல் குர்ஆன் 75:4)

மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று இவ்வசனத்தில் (75:4) கூறுகிறான்.
விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகளெல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய காரணம் என்ன வென்றால், மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.
ஏனென்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான்.
ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்பக் கொண்டு வந்து விடுவோம் என்று இந்த அறிவியல் உண்மையை உள்ளடக்கி அல்லாஹ் கூறுகிறான்.


சென்னையின் பிரபலமான சன் டிடெக்டிவ் நிறுவனத்தின் உரிமையாளரும், தமிழக காவல்துறையின் விரல்ரேகை பிரிவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவருமான திரு.வரதராஜன் அவரது பேச்சிலிருந்து...

உடலை அங்ககீனப் படுத்தி குற்றவாளிகளை அடையாளம் காணும் நிலையை உருவாக்கி வைத்திருந்தனர் தொடக்க காலத்தில்.

இது சரியாக இல்லாததை தொடர்ந்து குற்றவாளிகளின் உயரம், உடல் பருமன், விரல் நீளம், கைகளின் நீளம் என்னும் அளவீட்டு முறையில் குற்றப்பட்டியல் தயாரித்து வைத்திருந்தனர். ஆனாலும் ஒரே முக ஒற்றுமையைத் தவிர அனைத்து ஒற்றுமையுடன் குற்றவாளிகள் இருந்த போது இந்த முறையும் சரியில்லை என்று ஒதுக்கினர்.

அப்போது வெளிநாட்டறிஞர் ஒருவர் கண்டு பிடித்ததுதான் விரல்ரேகை பதிவு முறை. நமது விரல்களின் மேல்புறத்தை பதித்தல் விரல்ரேகை பதிவு எனப்படுகிறது. ஒரே கையில் உள்ள ஐந்து விரல்களின் பதிவும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை. இரட்டையர்களாக இருந்தாலும் அவர்களின் விரல் ரேகையும் ஒன்றாக இருப்பதில்லை.

தீயில் விரல்கள் பாதிக்கப்பட்டாலும் புதிதாக மேல்தோல் வளரும்போது ஏற்கனவே இருந்த ரேகையே மீண்டும் உருவாகிறது.

இடது கை பெருவிரலை நாம் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.அதனால் அதன் ரேகைப் படலம் தெளிவாக இருப்பதால்தான் நாம் இடது கை பெருவிரல் ரேகையை பதியச் சொல்கிறார்கள். தற்போது பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு அலுவலக விஷயங்களுக்காக பத்து விரல்களின் ரேகைகளும் பதிவு செய்யப்படுகிறது.

திரைப்படங்களில் காட்டப்படுவது போல் போலியான விரல்ரேகைகளை தயாரிப்பது எளிதல்ல. அவ்வாறு தயாரிக்கப்பட்டாலும் நிபுணர்கள் அதைக் கண்டறிந்து விடுவார்கள்.
குற்றவாளிகளுக்கான அடையாளமாக மட்டும் பயன்படுத்தாமல் அரசு குடிமக்களுக்கான அட்டைகள் தயாரிக்கும் போது விரல் ரேகையைப் பயன்படுத்தத் தொடங்கினால் போலி ரேஷன் கார்டு தொடங்கி, இறந்தும் வாழும் வாக்காளர்கள் அடையாள அட்டை வரை மாற்றத்தைக் கொண்டு வந்து விடலாம். (என்ன ஆட்சியாளர்களுக்குத்தான் சிக்கலாகி விடும்!)

உலக அளவில் தமிழக காவல்துறையில் தான் முதன் முதலில் 1895ம் ஆண்டு விரல் ரேகைப் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இது பெருமையான விஷயம் ஆனாலும் உலக அளவில் விரல்ரேகைப் பிரிவில் தற்போது பயன்படுத்தப்படும் புதிய யுத்திகள் நமது காவல்துறையில் பயன்படுத்தப்படுவதில்லை. அந்த முன்னேற்றம் இருந்தால் விரல்ரேகை பிரிவில் காவல்துறையின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்.

இன்று தேசிய அளவில் விரல் ரேகைப் பிரிவுகளை ஒன்றிணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படி செய்யப்பட்டால் குற்றவாளிகளின் கைரேகை இந்திய அளவில் அனுப்பப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.



பண்டைய பாபிலோனியர்கள் அவர்களுடைய வியாபார கொடுக்கல் வாங்கலை பதிவு செய்வதற்காக தங்கள் கைவிரல் பணிகளை களிமண்ணில் வைத்து அழித்தி பதிந்தனர். வியாபார கொடுக்கல் வாங்கலை சீனர்கள் மை தடவி தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்தனர்.மேலும் அதன் மூலம் குழந்தகளை அடையாளம் காணவும் விரல்ரேகை பதிவுகளை பயன் படுத்தினர்.

19 ஆம் நூற்றாண்டு வரை விரல் ரேகை பதிவுகள் குற்ரவாளிகளை கண்டறிய பயன்படுத்த்ப்படவில்லை.1858 ஆம் ஆண்டு இந்தியாவில் கூக்ளி மாவட்டத்தில் உள்ள ஜங்கிப்பூரில் முதன்மை நீதிபதியாக பபீயாற்றிய ஆங்கிலேயர் சர் வில்லியம் ஹர்ஷ்ல்
குற்றங்களை குறைப்பதற்காக விரல் ரேகைகளை பதிவு செய்யும் முறையை பயன்படுத்த தொடங்கினார்.

அதற்கு சில ஆண்டுகள் கழித்து ஸ்காட்லாந்தை சேர்ந்த டாக்டர் ஹென்றி பால்ஸ் ஜப்பானில் பபீயாற்றிய பொழுது அநாட்டு கலைஞர்கள் தங்கள் பழங்கால படைப்புகளில்
அவர்களுடைய விரல் ரேகைகளை பதிவு செய்து இருப்பதை கண்டறிந்தார். இது அவருக்குள் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விரல் ரேகை தொடர்பாக ஆராய தொடங்கினார்.1880 இல் பால்ஸ் தனது உறவினரான புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர்
ஜார்லஸ் டார்வினுக்கு கடிதம் எழுதி விரல் ரேகைகளை பகுத்தறிவதற்கான
ஒரு முறையை கண்டறிய உதவி கோரினார்.
ஆனால் டார்வின் மறுத்து விட்டார்.டார்வின் மற்றொரு உறவினரான சர் பிரான்சிஸ் ஹேல்டன் என்பவருக்கு கடிதத்தை அனுப்பி வைத்தார். ஹேல்டன் உலகின் பல பகுதிகளில் உள்ள மனிதர்களின் உயரம் எடை ஆகியவற்றை ஆய்வு செய்து அவை எப்படி பரம்பரை பரம்பரையாக தொடரந்து வருகின்றன. என கண்டரீயும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். அவர் இந்த கடிதத்துக்கு மதிப்பளித்து சுமார் 8 ஆயிரம் விரல் ரேகைகளின் மாதிரிகளை சேகரித்து அவற்றி ஆய்வு செய்தார்.

1892 இல் பிங்கர் பிரிண்ட்ஸ் (FINGER PRINTS) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் தான் கைவிரல் ரேகைகளை வைகைப்படுத்துவதற்கான் ஒரு முறையினை குறிப்பிட்டு இருந்தார். இது தான் முதன் முதலில் பகுத்தறியப்பட்ட ஒரு நடைமுறை.இது விரல் ரேகைகளில் உள்ள வளைவுகள்,துளைகள்,அலைகள் · (ARCHES,LOOPS,WHORLS) இவற்றை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது.




.

No comments:

Post a Comment