சிறந்த ஆன்டி வைரஸ்
இணைய தளம் இல்லாமல் உலகம்இல்லை என்றாகிவிட்டது. நம்மில்பெரும்பாலானோர் இணைய தளத்தில்செல்லும்போது பாதுகாப்பில்லாமல்செல்கின்றனர். அதாவது தன்னுடையகம்ப்யூட்டரில் தகுந்த ஆன்டி வைரஸ்சாப்ட்வேர் இல்லாமல் செல்கின்றனர்.
நாம் பயன்படுத்தும் பல ஆன்டிவைரஸ் சாப்ட்வேர்கள் டெமோவர்ஷனாக கிடைக்கின்றன. இந்த டெமோ வர்ஷன் ஆன்டி வைரஸ்களைப்பயன்படுத்துவதன் மூலம் அது மிகுந்த தாக்குதலை ஏற்படுத்தும் வைரஸ்களைகட்டுப்படுத்தாது. அப்படி கட்டுப்படுத்து என்று சொன்னால் அது முழுமையானசாப்ட்வேரை இன்ஸ்டால் செய்திடு என்று சொல்லும்.
முழு பாதுகாப்புக்கு ஃபுல் வர்ஷன் ஆன்டி வைரஸ் சாப்ட் வேர் பயன்படுத்துவதுபாதுகாப்பானது. நாம் இணைய தளத்தில் தேடிப் பார்க்கும்போது இலிஸ்கேன், குயிக் ஹீல்,நோட், இலிசெட் ஆன்டி வைரஸ், ஃபையர், அவைரா, நார்டன் ஆன்டி வைரஸ் போன்றஆன்டி வைரஸ் சாப்ட்வேர்களை இணைய தளத்தின் மூலம் டெமோவாககொடுக்கின்றனர்.
நாள்தோறும் மேம்பட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பலவைரஸ்கள் புதிது புதிதாக முளைக்கின்றன. இவற்றையெல்லாம் அடுத்தவர் உழைப்பைக்கொடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் சிலரே தயாரிக்கின்றனர்.
இவர்களிடமிருந்து நம்முடைய கணினியை எப்படிக் காப்பாற்றுவது? அதற்கு தகுந்தஆன்டி வைரஸ் சாப்ட்வேரை நிறுவுவதின் மூலமே தீர்வு காண முடியும்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். சமீபத்தில் கோமோடோ ஆன்டி வைரஸ் என்றசாப்ட்வேரை கோமோடோ நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் சிறப்பம்சங்களைக்காண்போம்.
இந்த ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் நம்முடைய கணினிக்கு ஏற்றவாறு பதிவிறக்கம்ஆகும். அதாவது ஒவ்வொரு ஆப்ரேடிங் சிஸ்டத்திற்கு ஏற்றவாறு பதிவிறக்கம் ஆகும்.இதை டவுன் லோட் செய்ய
என்ற முகவரியை கிளிக் செய்யவும்.
இதனை நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதை இன்ஸ்டால்செய்ய வேண்டும். இப்படி இன்ஸ்டால் செய்யும்போது நெட்வேர்க் வைத்திருப்பவர்கள்கவனமாக இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஏனென்றால் இதில் ஃபையர் வால் என்றஆப்ஸன் உள்ளது. நெட்வேர்க் தேவைப்படுபவர்கள் ஃபையர்வால் என்ற ஆப்ஸனை கிளிக்செய்ய வேண்டாம்.
இது இன்ஸ்டால் ஆகி முடித்ததும் ஆன்லைன் மூலம் ஆப்டேட் செய்ய வேண்டும்.அப்போதுதான் இது சிறப்பாக செயல்படும். டெமோ வேர்ஸனே மிகவும் சிறப்பாகசெயல்படுகிறது. எனது கணினியில் இதைத்தான் இன்ஸ்டால் செய்துள்ளேன். புதிய புதியவைரஸ்களை கண்டு பிடித்து அழிப்பதில் இது மிகவும் தேர்ந்ததாக உள்ளது. இதைநாளுக்கு நாள் அப்டேட் செய்வதின் மூலம் இதன் பணி மிகவும் சிறப்பாக இருக்கும்.பயன்படுத்திப் பாருங்கள் இதன் சிறப்பை உணருவீர்கள்!
No comments:
Post a Comment